சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அடக்கடவுளே.. நடிகை சமந்தாவுக்கு இப்படியொரு பிரச்சினையா.! புகைப்படத்தை கண்டு பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நடிகை சமந்தா இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் யசோதா. இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே சமந்தா யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர், ரசிகர்ளாகிய நீங்கள் யசோதா டிரைலருக்கு அளித்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கையில் நான் சந்திக்கும் சவால்களை சமாளிக்க வலிமையை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் எனக்கு மியோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது.
முழுமையாக குணமடைந்த பின இதுகுறித்து உங்களிடம் சொல்லலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்சினை குணமாக கூடுதல் காலமாகும். இதனை ஏற்றுகொண்டு நான் அதனுடன் போராடி வருகிறேன். விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். உடல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு. இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார்.