மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு வாழ்க்கையில் அது தான் முக்கியம்.! ரசிகர்களை அதிர வைத்த சமந்தா.!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அவர் தற்போது நயன்தாராவை போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சமீபத்தில் வெளியான குஷி திரைப்படத்தில் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் பல்வேறு வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று அவர் தன்னுடைய தொற்றுக்கு சிகிச்சை பெறுவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 வருடதிருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு திரைத்துறையில் மீண்டும் நுழைந்த அவர், நடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடினார் அந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், திடீரென்று சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த சமந்தா, சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் மட்டும் நடித்து வருகிறார். இதற்கு நடுவே சமந்தாவின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் உங்களுக்கு சாப்பாடு முக்கியமா? அல்லது தாம்பத்யம் முக்கியமா? என்று கேள்வி எழுப்பியபோது தனக்கு தாம்பத்தியம் தான் முக்கியம் என்று பதிலளித்துள்ளார் நடிகை சமந்தா.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.