மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலாகலமாக நடந்த சம்யுக்தாவின் பர்த்டே பார்ட்டி! அடேங்கப்பா.. யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பலரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். இதன் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவ்வபோது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்கள் போன்றவற்றை இணையத்தில் வெளியிடுவார்.
இந்நிலையில் சம்யுக்தா அண்மையில் தனது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ரம்யா பாண்டியன், சோம், ஷிவானி, பாலாஜி, ஆஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.