மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தாவிற்கு அவரது மகன் கொடுத்த சர்ப்ரைஸ்! செம ஹேப்பியில் குடும்பத்தார்கள்!
விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்க 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 56 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டுள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பாடகி சுசித்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த வார எலிமினேஷன் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம் ஆகிய ஏழு பேரும் நாமினேட் ஆகியிருந்த நிலையில், பிக்பாஸ் Nomination Topple card என்ற புதிய பவர் ஒன்றை அறிமுகம் செய்தார்.
அதனை வென்ற அனிதா தந்திரமாக சம்யுக்தாவை நாமினேட் செய்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேற்றப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் மிகுந்த வருத்தமடைந்தார். ஆனாலும் தனது மகனை பார்க்க போவதாக கூறி மனதை தேற்றிக்கொண்டார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தாவை அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் கேக் வெட்டி வரவேற்றுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.