மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவதூறாக பேசி அசிங்கப்படுத்திய மீரா மிதுன்! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்த பிரபல நடிகை!
தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், விஜய், சூர்யா போன்றோர் தங்களது அப்பாவின் மூலமாகவே நடிகர்கள் ஆனார்கள் எனவும் அவர்களை குறித்து தரக்குறைவாக பேசி மீரா மிதுன் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் அவர் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை மிகவும் மோசமான வார்த்தைகளால் அவதூறாக பேசியும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் கொந்தளித்து போனர். மேலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
My legal team has just issued Legal Notice to @meera_mitun for degrading my modesty and moral character with baseless allegations and name calling me as 'Criminal','affair' etc.Her apology is demanded failing which Defamation Case will be filed for damages caused to my reputation pic.twitter.com/9O9a5wGgyr
— Sam Sanam Shetty (@SamSanamShetty1) August 10, 2020
இந்நிலையில் சனம் ஷெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்
விஜய் கஷ்டப்பட்டு தனது உழைப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னுக்கு வந்துள்ளார். அவரை பற்றி பேசும் முன்பு யோசிக்க வேண்டும் என்று மீராமிதுனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து சனம் ஷெட்டிக்கு எதிராக மீரா மிதுன் அவதூறு கிளப்பி பதிவுகளை வெளியிட்டார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி என்னை பற்றி சமூக வலைத்தளத்தில் மீராமிதுன் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீராமிதுனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்