மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென குருநாதர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! நடுரோட்டில் சாண்டியின் அலப்பறையை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் நடன இயக்குனர் சாண்டி. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களை வெற்றிகரமாக கடந்து இறுதிக்கட்டம் வரைசென்று இரண்டாவது இடத்தை வென்றார்.
சாண்டி பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி வெளியேயும் எப்பொழுதுமே ஏதேனும் நகைச்சுவைகளை கூறிக்கொண்டு கலகலப்பாக இருக்கக்கூடியவர். அவர் இருக்குமிடத்தில் எப்போதும் சிரிப்பு சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்க்க அவரும் ஒரு காரணமாக இருந்தார் என கூறலாம். சாண்டிக்கு பெரியவர்கள் மட்டுமின்றி ஏராளமான சிறுவர்களும் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாண்டி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸிங் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கவுள்ளார். இதுகுறித்த பிரமோ வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் குருநாதரே சாண்டியிடம் இதுகுறித்து நேரடியாக கூறுவது போலவும், அதனை கேட்டு அவர் உற்சாகத்தில் நடனமாடும்வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.
நம்ம சாண்டி மாஸ்டருக்கு புது டாஸ்க்! 😍 #DancingSuperStars! 😎 வர்ற ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஆரம்பமாகுது! #DSS #VijayTelevision pic.twitter.com/m6v85qLDZL
— Vijay Television (@vijaytelevision) November 14, 2019