மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! சோகத்தில் திரைப்பிரபலங்கள் இரங்கல்!!
தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் சந்தோஷ் சிவனின் தந்தை பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான சிவன் அவர்கள் மாரடைப்பால் காலமானார். தமிழ் சினிமாவில் தளபதி, ரோஜா, துப்பாக்கி, தர்பார் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பெருமளவில் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
இவரது தந்தை சிவன். புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் செம்மீன் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் அபயம், யாகம், கொச்சு கொச்சு மேகங்கள் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். சிவன் இதுவரை 3 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.