பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சினிமாவில் அறிமுகமாகிறார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்! நடிகை யார் தெரியுமா?
அண்ணாச்சியின் சரவணா ஸ்டோர் விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது. ஆரம்பத்தில் இவரது மீது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலியும், கிண்டல்களும் பேசப்பட்டது. தன்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது முயற்சியில் வெற்றிபெற்றார் சரவணா ஸ்டோர்ஸ் அருள்.
இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆரமப்த்தில் இவர் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்றும், நயன்தாரா நடிகை என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், அதெல்லாம் வதந்தி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது உண்மைலயே அண்ணாச்சி படத்தில் நடிக்க உள்ளார்.
அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்துக்காக வட இந்தியாவிலிருந்து பிரபல ஹீரோயினும் கமிட் ஆகவுள்ளதாக கூறியுள்ளனர். இப்படம் குடும்பப்பாங்கான கருத்துள்ள கதையாக இருக்க வேண்டும் என்று அண்ணாச்சி கூறிவிட்டாராம்.
விளம்பரத்தில் மட்டும் பார்த்த அண்ணாச்சியை விரைவில் வெள்ளித்திரையில் காண்பதற்காக பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.