மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video: போட்றா வெடிய.. லெஜெண்ட் சரவணன் படத்தின் மாஸ் மோஷன் போஸ்டர்.. அடிபொலி சாரே..!
சரவணாஸ் ஸ்டோர் வைத்து நடத்தி வரும் லெஜண்ட் சரவணன், திரையுலகில் கால்பதித்து இருக்கிறார். இவர் தனது சொந்த தயாரிப்பில் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெ.டி ஜெரி இயக்குகிறார்.
நடிகை ஊர்வசி, கீர்த்திகா, நடிகர்கள் யோகிபாபு, நாசர், பிரபு, விஜயகுமார் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆக்சன் படமாக விரைவில் வெளியாகவுள்ளது.
இசையமைப்பு பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் மேற்கொண்டுள்ளதால், படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.