மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 7வது சீசன் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பலர் வெளியேறிய நிலையில், தற்போது சிலர் மட்டுமே உள்ளனர்.
மேலும், தற்போது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது இந்த வாரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து சென்றனர்.
இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷனில் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய மூன்று பேர் மட்டுமே உள்ளனர். இதில் விசித்ரா கட்டாயம் வெளியேற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதனால் இந்த வாரம் ரவீனா அல்லது விக்ரம் தான் வெளியேற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மணி மற்றும் ரவீனா இருந்தால் நல்ல கண்டன்ட் கிடைக்கும் என்பதால், இந்த வாரம் விக்ரம் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.