மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. தளபதி விஜய்யின் தலைமுடிக்கு என்னாச்சு! சதீஷ் பகிர்ந்த அரிய புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் சதீஷ். தனது டைமிங் கவுண்டராலும், காமெடியாலும் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார்
மேலும் அவர் தற்போது சில படங்களில் ஹீரோவாகவும் அவதாரமெடுத்துள்ளார். அவர் நாய் சேகர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.
My best ride ever 😍😍😍 #VaathiRide 😍😜#RideWithThalapathy @actorvijay sir https://t.co/5Pjy2o8XNi pic.twitter.com/dsVafHTFGA
— Sathish (@actorsathish) December 19, 2021
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சதீஷ் தற்போது நடிகர் விஜய்யுடன் காரில் பயணம் செய்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இதுதான் எப்பொழுதும் எனது பெஸ்ட் ரைடு. வாத்தி ரைடு. ரைடு வித் தளபதி விஜய் என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் விஜய்யின் தலைமுடிக்கு என்னாச்சு! மொட்டை அடிச்சது போல இருக்கே! இதுதான் அவரின் உண்மையான தோற்றமா? என குழப்பத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
.