திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் காலடி நாகமாக சுற்றும் சிலுவை சர்ச்சை.. சவுக்கு சங்கர் பரபரப்பு விமர்சனம்.. ஷாக் ரியாக்சனில் விஜய் ரசிகர்கள்.!
விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகும் படங்களில், கிருத்துவ மதம் தொடர்பான பெயர்கள் மற்றும் அடையாளங்கள் தென்படுவதாக வலதுசாரியினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஆனால், எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாக இருந்த விஜயை அரசியலுக்காக வீதியில் இழுவிட்டதே வலதுசாரியினர் தான் எனவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு சவுக்கு சங்கர் அளித்துள்ள பேட்டியில், "எதை நினைத்து அவர் செய்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை (மத அடையாளத்தை கூறுகிறார்). ஆனால், அவர் செய்வது சரி. இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்துக்களுக்கே அனைத்து உரிமை என கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு சம உரிமை என்பது இல்லை. அதனாலேயே மசூதிகள், சர்ச்சுகள் இடிக்கப்பட்டுள்ளன. மத ரீதியாக சிறுபான்மையினரை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரிக்க நினைக்கிறது. பாலிவுட்டில் 3 கான்கள் இஸ்லாமியராக இருப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. அமீர்கான் மனைவி, ஷாருக்கான் மகன் பிரச்சனை என வலதுசாரிகள் பிரச்சனையை உண்டாக்கினார்.
அமீர்கான் தனது மனைவி வெளிநாடு செல்லலாம் என கூறுவதாக பேசி, அதற்கடுத்து நடந்த பிரச்சனைகள் காரணமாக அவர் இன்று வரை வாயை திறக்கவில்லை. அந்த வகையில் விஜய் செய்வது எதையாலும் என்னை தடுக்க முடியாது என்று குறியீடுகள் மூலமாக கூறுவதாக நான் நினைக்கிறன்.
எச்.ராஜா செய்த சிறுமைத்தனமான செயலை செய்தார். இழிவான மனதோடு விஜயை ஜோசப் விஜய் என அடையாளப்படுத்தினர். கிருத்துவர் என கூறினார். இன்று விஜய் அவர் நடிக்கும் படத்தில் அவரின் அடையாளத்தை வைக்கிறார். அவர் எங்கும் தன்னை இந்த மதத்தை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தி பேசியது கிடையாது. அவரின் ரசிகர்கள் மதத்தை பார்த்து படம் பார்க்க சென்றது இல்லை" என்று பேசினார்.