மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் 7ஜி ரெயின்போ காலனி.. கதாநாயகியை மாற்றிய செல்வராகவன்.! காரணம் என்ன தெரியுமா.?
தமிழ் திரைபட இயக்குநரான செல்வராகவன் முதன் முதலில் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் எழுத்தாளராக அறியபட்டு பிரபலமானார். இதன்பின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.
இதன்படி,செல்வராகவன் இயக்கத்தில் 2005ஆம் வருடம் வெளியான தமிழ் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா அறிமுக கதாநாயகனாக நடித்த இந்த திரைபடத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் யுவன் இசையில் வெளியான பாடல் அனைத்துமே செம்ம ஹிட்டானது. 7ஜி ரெயின்போ காலனி படம் மற்றும் இப்படத்தின் பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பகுதியை செல்வராகவன் இயக்கவிருக்கிறார்.
இத்தகைய நிலையில், இப்படத்தின் படபிடிப்பு இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் திரைக்கதை எழுதும் பணியில் செல்வராகவன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். படத்தின் கதாநாயகனாக ரவி கிருஷ்ணாவும் படபிடிப்பிற்கு தயாராகி வருகிறாராம். அடுத்த ஆண்டு திரையரங்கில் 7ஜி ரெயின்போ காலணி 2 படத்தை காணலாம். மேலும் சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கும் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம். இதனால் அடுத்த கதாநாயகி யாராக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.