மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அன்பின் குடும்பம்.! சூப்பர் சிங்கர் செந்தில்- ராஜலட்சுமியின் மகன், மகளை பார்த்தீங்ளா.! செம்ம கியூட் புகைப்படம்!!
விஜய் டிவியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் ரீச்சானவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர். அவர்கள் நிகழ்ச்சியில் அசத்தலாக நாட்டுப்புற பாடல்களை பாடி பெருமளவில் பிரபலமானார்கள். மேலும் செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளரானார்.
அதனை தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் செந்தில் இருவருக்கும் பல படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இருவரும் வெளிநாடுகளிலும் கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி செந்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இருளி என்ற படத்தில் நடிக்கின்றனர். ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கும் செந்தில்-ராஜலட்சுமி தங்களது மகன், மகளை அறிமுகம் செய்து குடும்பத்தோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் அன்பின் குடும்பம், அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.