#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீரியல் நடிகை அர்ச்சனாவா இப்படி... வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி 2 தொடரில் வில்லியாக நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமடைந்தவர் அர்ச்சனா. இந்த தொடரில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. காமெடியான அவரது பேச்சும், வில்லத்தனமான பார்வையும் ரசிகர்களை கவர்ந்தது. அவருக்கு ரசிகர்களும் உருவாகினர்.
இவர் சீரியலில் மட்டுமின்றி வெப்சீரிஸ் தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சீரியலுக்கு பாய் பாய் சொல்லி விட்டு வெள்ளித்திரையில் நடிக்க துவங்கியுள்ளார்.
தற்போது அருள்நிதி நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய ரோலில் அர்ச்சனா நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து வருகிறார். தற்போது கூட குட்டையான உடையில் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.