#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அவ அப்படி நடந்துப்பான்னு எதிர்பார்க்கவே இல்ல" - ஸ்ரீநிதி குறித்து மனம்திறந்த நட்சத்திரா..!!
சின்னத்திரை மூலமாக பிரபலமான நடிகை நட்சத்திரா. இவரின் பூர்வீகம் கேரளா ஆகும். சினிமா வாய்புக்காக்க சென்னைக்கு வந்த நட்சத்திரா, கடந்த 2016 ல் ஜெயக்குமார் என்பவரின் இயக்கத்தில் வழியான கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதன்பின்னர் சரியான வாய்ப்பு அமையாததால் சீரியலின் பக்கம் திரும்பிய நட்சத்திரா, ஜீயே தமிழில் யாரடி நீ மோஹினி என்ற தொடரில் நடித்திருந்தார். இதன் மூலமாக அவருக்கான அடையாளம் கிடைக்க தொடங்கியது. அவரின் கதாபாத்திரமும் மக்களால் வரவேற்கப்பட்டது.
பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் தொடரில் நடித்திருந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக நட்சத்திரா - விஸ்வா ஜோடிக்கு திருமணம் நடந்தது. நட்சத்திராவின் தாத்தா உடல்நிலை சரியில்ல்லாத காரணத்தால் அவசர கல்யாணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நட்சத்திராவின் தோழி ஸ்ரீநிதி அவதூறுகளை பரப்பியதாகவும் தெரியவருகிறது. இதுகுறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நட்சத்திரா - விஷ்வா பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த பேட்டியில், "எங்களின் திருமணம் அவசரமாகத்தான் நடந்தது.
எனது தாத்தாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் எனது திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தான் யாரிடமும் சொல்லாமல் திருமணம் நடந்தது. ஆனால் ஸ்ரீநிதி எதற்காக அவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை. அவர் என் நெருங்கிய தோழி.
அதனால் என்னைப்பற்றி கூறியதை நான் மன்னித்துவிடுவேன். ஆனால் என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து அவதூறாக பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவரது குடும்பத்தினர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் அவர் எதற்காக அப்படி பேசினார் என தெரியவில்லை" என கூறினார்.