#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"நான் நடித்த ஆபாச படத்தை பார்த்துவிட்டு என் தம்பி என்னிடம் அந்த மாதிரி கேட்டார்" சகீலா பேட்டி.!?
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஷகீலா. முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு 'ப்ளே கேர்ள்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த அப்படத்தில் அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். மிகவும் அடல்ட் படமாக இப்படம் இருந்ததால் முதல் படத்திலிருந்து சகிலாவை ஆபாச நடிகை என்ற முத்திரையை குத்தி விட்டனர்.
மேலும் ஷகிலா கதாநாயகியாக நடித்த தின்னாரா தும்பிகள் என்ற திரைப்படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து பல முன்னணி நடிகர்களும் கவர்ச்சி நடிகையின் படம் எப்படி 100 நாட்கள் ஓடியது என்று அதிர்ச்சியில் இருந்து வந்தனர். மலையாளத்தில் முன்னணி நடிகர்களான பலரும் ஷகிலாவின் ரசிகர் கூட்டங்களை பார்த்து ஆச்சரியமும், அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சினிமாவில் இருந்து நீண்ட பிரேக் எடுத்துக்கொண்ட ஷகிலா சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இருந்து அவரது வாழ்க்கையே நல்லவிதமாக மாறிவிட்டது என்று பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் சகிலா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலிற்க்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் "என் வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள் உள்ளன. அதில் ஒன்று நான் நடித்த ஆபாச படத்தை என்னுடைய சொந்த தம்பி அவரது நண்பர்களுடன் பார்த்துவிட்டார். அதன் பிறகு மூன்று நாள் அவருக்கு காய்ச்சல். என்னிடம் வந்து நீ ஆபாச படத்தில் நடித்துள்ளாய் என்று கேட்டார்.
நானும் ஆமாம் என்று அழுத்தமாக கூறினேன். நான் ஆபாசமாக நடிக்கவில்லை கவர்ச்சியாக தான் நடித்தேன் என்று புரிய வைத்தேன். மேலும் இது குறித்து பேசி அவர் நான் என் குடும்பத்தின் சூழ்நிலைக்காக தான் அந்த மாதிரி செய்தேன். ஆபாச நடிகை என்ற பெயரை மாற்ற பல வழிகளில் முயற்சி செய்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.