#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா எதிரொலி! திடீரென்று நின்று போன ஷகிலா நடிகை திருமணம்! வருத்தத்தில் ரசிகர்கள்!
திரையுலகில் சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி புயலாக வலம் வந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர்.
இப்படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சத்தா என்பவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகையான அவர் நடிகர் அலி பைசூல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறுவதாக தேதி குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது மேலும் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வீட்டைவிட்டு செல்லாமல் வீட்டினுள்ளேயே இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை ரிச்சா சத்தா, அலி பைசூல் திருமணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் 2020ஆம் ஆண்டிற்குள் கண்டிப்பாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.