#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
1 நாளைக்கு 4 லட்ச சம்பாதிச்சவ... இப்போ வாடகை வீட்ல... நடிகை ஷகீலாவின் மனம் திறந்த பேட்டி.!
மலையாள சினிமா உலகையே கட்டி ஆண்டவர் ஷகிலா. இவரது திரைப்படங்கள் ரிலீஸாகிறது என்றால் மம்முட்டி மற்றும் மோகன்லால் போன்றோரின் திரைப்படங்கள் கூட ரிலீஸ் ஆக பயந்த காலங்களும் உண்டு. அந்த அளவிற்கு மிட் நைட் மசாலா திரைப்படங்களின் மூலம் மலையாள சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.
அதன் பிறகு மார்க்கெட் சரிந்ததால் தமிழ் சினிமாவிற்கு வந்து கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை மக்களுக்கு காட்டியவர். தற்போது youtube சேனல் ஆரம்பித்து பிரபலங்களை பேட்டிக் கொண்டு வருகிறார். இவரது பேட்டியின் மூலம் பல சர்ச்சையான உண்மைகள் வெளிவந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை மற்றும் நான் சினிமாவில் சம்பாதித்தது பற்றி மனம் திறந்து இருக்கிறார் ஷகிலா. தன்னை மக்கள் ஒரு பெரிய பணக்காரர் என்றும் சொகுசு கார்கள் மற்றும் பங்களாவுடன் வாழ்ந்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை அப்படி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் நாள் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் வரை சம்பாதித்தேன். எல்லா வசதிகளும் என்னிடம் இருந்தது ஆனால் என் அக்கா அனைத்தையும் எடுத்து விட்டார். இப்போது வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். என்னிடம் இருப்பதெல்லாம் நான் மீண்டும் சம்பாதித்தது எனக் கூறி ரசிகர்களை நெகிழ்ச்சிடைய வைத்திருக்கிறார் முன்னாள் கவர்ச்சி புயல்.