#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தின் அழகிய மகளா இது? அம்மாவையே மிஞ்சிட்டாரே!! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்.!
பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் நடிகர், நடிகையர்களே இவருக்கு பெரும் ரசிகர்களாக உள்ளனர்.
மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.
இந்நிலையில் அமர்களம் படத்தில் நடித்த போது அஜித் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய ஷாலினி முழுவதும் தனது கணவருக்கு உறுதுணையாகவும், தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் முழுவதும் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அஜித்திற்கு அவரது வாழ்க்கையில் பல தடைகள் வந்தபோதும், விபத்தால் அவர் போராடிய போதும் அவருக்கு பக்கபலமாக நின்றவர் ஷாலினி. இந்நிலையில் சமீபத்தில் ஷாலினி தனது மகள் மற்றும் மகனுடன் வெளியில் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அஜித் மகளா இது? இப்படி வளர்ந்துவிட்டாரே என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.