திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாஸ்டர் படத்தை வைத்து சாந்தனுவை கேலி செய்த ரசிகர்கள்! அதற்கு அவரது பதிலடியை பார்த்தீர்களா!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பெரும் வசூல் சாதனை படைத்தது. மாஸ்டர் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மஹேந்திரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தில் சாந்தனு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் படத்தை விளம்பரப்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இந்தநிலையில் மாஸ்டர் படம் வெளியான பின்னர் ரசிகர்கள் பலரும் அதனை கிண்டல் செய்யத் துவங்கினர். ஆனால் அதனை சாந்தனு பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது மாஸ்டர் படத்திற்காக சாந்தனுவுக்கு கிடைக்கும் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளனர்.
The smallest joy one gets from trolling another🙂Tired of this troll but thanks to all d stones thrown at me for knowingly or unknowingly sending out vibes into d universe...
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) March 25, 2021
நீங்களே சொல்லீட்டிங்க, நடக்காம போயிடுமா?
This WILL happen one day&my reply will be a “😊”
Love- Bhargav pic.twitter.com/EhhNFv079E
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொருவரை கிண்டல் செய்வதால் கிடைக்கும் அல்ப சந்தோஷம். இதனால் சோர்ந்துவிட்டேன். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ என் மீது வீசும் அனைத்து கற்களுக்கும் நன்றி. நீங்களே சொல்லிட்டீங்க நடக்காம போயிடுமா? ஒரு நாள் அதுவும் நடக்கும், அப்பொழுது என் சிரிப்பு மட்டும் பதிலாக இருக்கும். அன்புடன், பார்கவ் என தெரிவித்துள்ளார்.