மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அய்யோ மணி சார்.. பிளீஸ்" கெஞ்சி கூத்தாடும் ஷாருக்கான்.. எதற்காக தெரியுமா.?!
மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை மனிஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'உயிரே'. இந்தப் படம் வெளியாகி தற்போது 23 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தற்போதைய இளம் தலைமுறையினர் கூட இந்த படத்தை ரசித்து சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவிடுவதை காண முடிகிறது.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் சில படங்கள் வெளியாகின. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போதெல்லாம் அவரிடம் நீங்கள் மீண்டும் எப்போது மணி ரத்தினத்துடன் சேர்ந்து படம் நடிப்பீர்கள் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
இந்த கேள்விகளால் நடிகர் ஷாருக்கானுக்கு மணிரத்தினத்துடன் படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அவரே வேடிக்கையாக, " மணிரத்தினம் சார் உங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நான் உங்களிடம் இதை கேட்டு விட்டேன். இப்போது எல்லோரது முன்னிலையிலும் உங்களிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள். அதற்காக நான் விமானத்தின் மீது ஏறி நின்று கூட தைய தையா என்று ஆடுகிறேன். ப்ளீஸ் மணி சார்."என்று கூறியுள்ளார். உயிரே படத்தில் ஷாருக்கான் தையா தையா பாடலுக்கு ரயில் மீது நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது