96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ரூ.10 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடக்காதது ஏன்? ஷில்பா ஷெட்டி விளக்கம்
1990 களில் இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் ஷில்பா ஷெட்டி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரிட்டிஷ் செயலி செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு 2009ல் திருமணமான பிறகு நடிப்பதை குறைத்து கொண்டார் ஷில்பா ஷெட்டி.
தற்போது யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் பிட்னஸ் மாத்திரை குறித்த விளம்பரம் ஒன்றில் நடிக்க சொல்லி ஷில்பாவிடம் கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் அளிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் ஷில்பாவோ எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த மாதிரியான நம்பிக்கையற்ற விஷயங்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் இயற்கையான முறையில் யோகா, உடற்பயிற்சி செய்தாலே உடல் எடையை குறைக்கலாம். இதற்கு மாத்திரை எல்லாம் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.