குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விஜய் சேதுபதி பட நடிகையை துடிதுடிக்க கொன்ற மகன்.! வைரலாகும் அதிர்ச்சி செய்தி.!?
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பலமொழிகளிலும் தற்போது திரைப்படங்கள் நடித்து பிசியான நடிகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற பல கேரக்டர்களில் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.
வில்லனாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எல்லாமே மிகப்பெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வில்லனாக இனி நடிக்கப் போவதில்லை என்று விஜய் சேதுபதி கூறியிருந்தார். மேலும் கதாநாயகனாக தற்போது பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி பிஸியாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.
இது போன்ற நிலையில் 2022 ஆம் வருடம் எம் மணிகண்டன் என்பவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் யோகி பாபு, நல்லாண்டி, குட்டி சொர்னா போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 'கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் காசியம்மாள்(74) என்பவர். இவருக்கும் இவரது மகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காசி அம்மாளின் மகன் கோவத்தில் கையில் கிடைத்த பலகையை வைத்து காசி அம்மாளை அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் பிரிந்துள்ளது. அவரது மகன் தாயை கொன்ற குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.