மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரேயாவின் கணவருக்கு கொரோனோ பாதிப்பா? அவரே அளித்த விளக்கம்!
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரதாண்டமாடி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரிக்கு கடந்த சில காலங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரேயா அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள். இங்கு இருந்தால் கொரோனா தொற்று வந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் வீட்டிலேயே தனிதனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சமூக விலகலை கடைப்பிடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இருவரும் நலமாக இருப்பதாக நடிகை ஸ்ரேயா கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.