மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடலிங்கில் பிஸியாக இருந்து வரும் ஸ்ரேயா சரண்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரேயா சரண், தற்போது குணசத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். முதன் முதலில் 2001 ஆம் வருடம் வெளியான இஷ்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு தமிழில் மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், சிவாஜி, குட்டி, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் ஸ்ரேயா.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், மாடலிங்கில் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யாசமான முறையில் போட்டோஷூட் செய்து பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.