குக் வித் கோமாளி ஸ்ருஷ்டியா இது.. திடீர்னு இப்படி உடம்பு மெலிஞ்சிட்டாங்களே.?



Shrusti latest photos viral

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் தமிழில் முதலில் 'மேகா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

Vijaytv

இப்படத்திற்கு பின்பு தர்மதுரை, டார்லிங், கத்துக்குட்டி போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் படங்களில் இவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்படவில்லை என்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

இது போன்ற நிலையில், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளிகள் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது.

Vijaytv

இதன்படி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருஷ்டி, சமீபத்தில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் உடல் மெலிந்து காணப்பட்டதால் ரசிகர்கள் என்னாச்சு இவருக்கு என்று கமெண்ட் செய்து வந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்ருஷ்டி தான் தினமும் யோகா செய்வதாகவும், டயட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.