மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. மாலதீவில் ஒரே ரொமான்ஸ்தான்.! செம கியூட்டாக சித்து-ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படங்கள்!!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த திருமணம் என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரங்களாக, கணவன் - மனைவியாக நடித்து மக்களைப் பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. அந்த தொடரில் நடித்தபோதே அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி தொடரில் முன்னணி ஹீரோயினாகவும், சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி 2 தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். இருவருக்குமே தனித்தனியாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா மற்றும் சித்து இருவரும் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் தாங்கள் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை வெளியிடுவர். தற்போது இருவரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு ரொமான்ஸாக அவர்கள் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.