#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திரையில் மீண்டும் சில்க் ஸ்மிதா; ரசிகர்கள் மகிழ்ச்சி
இது வரை எடுத்துள்ளார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என நான்கு படங்களை இயங்கியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் அடுத்து இந்தியில் ஒரு வரலாற்று படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்நிலையில் ரஞ்சித் ஒரு வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கயுள்ளார். அதுவும் மறைந்த முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை பல மர்மங்களை கொண்டது. எனவே இப்படி ஒரு படம் வெளிவருவதை ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
அவரது வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை படமாக எடுக்கப்பட உள்ளது. சில்க்கின் வாழ்க்கை ஏற்கனவே இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. இதில் நடிகை வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவாக நடித்தார்.
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகி வருகிறது. அதை போல சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாக இருக்கிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக யார் நடிக்கப்போகிறார் என்ற ஆர்வமும் அனைவர்க்கும் உள்ளது.