திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆத்மன் படத்திற்காக ஆத்மார்த்தமாக உழைக்கும் சிம்பு: சிதறவிடும் வீடியோ வைரல்.. ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் லிட்டில் சூப்பர்ஸ்டார் என பெயர்பெற்று, முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன் டிஆர் என்ற சிம்பு.
இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன், மாநாடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அளித்தது. மாநாடு படத்தின் வெற்றி, சிம்புவின் திரையுலக வாழ்க்கையை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணிக்க வைத்தது.
அதனைத்தொடர்ந்து, தற்போது சிம்பு தனது 48 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஆத்மன் என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு தயாராகி வருகிறார். இதற்காக உடலையும் கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாக தொடங்கியுள்ளது.
சிம்பு உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உடற்பயிற்சி செய்யும் விடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#Atman #SilambarasanTR is getting ready for #STR48 🔥 @SilambarasanTR_ @prosathish pic.twitter.com/LgcsgQqLK9
— Sathish (@prosathish) December 2, 2023