மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்போ செம மாஸ்தான்.! உலக நாயகனுடன் இணைந்து நடிக்கும் சிம்பு.! அதுவும் இயக்குனர் யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக அவதாரமெடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சிம்பு. இடையில் சில காலங்கள் இவரது படங்கள் பெரும் தோல்வியை தழுவிய நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் அசத்தலான கம்பேக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இறுதியாக அவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சிம்பு தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறாராம்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்புவின் 50வது திரைப்படம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது நடிகர் சிம்பு ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிலம்பரசன் இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கமல், சிம்பு மற்றும் மணிரத்னம் கூட்டணி குறித்த அப்டேட் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.