#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது நண்பன் மகத்துகாக நடிகர் சிம்பு செய்த அசத்தலான காரியம்! என்னனு பார்த்தீர்களா! வாழ்த்தும் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மகத். இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
அதனைத் தொடர்ந்து மகத் காளை, அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்திலும் மற்றும் விஜய் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்தே அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் மகத் தனது காதலியான பிராச்சியை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் மகத் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிப்பில் காதல் ConditionsApply என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.