#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக் பாஸ் போட்டியாளர் மகத்தை ஓங்கி அறைந்த பிரபல நடிகர்! வைரல் வீடியோ உள்ளே!
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர்தான் பிக் பாஸ். இதன் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிக் பாஸ் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மஹத். இவர் விஜய் நடிப்பில் உருவான ஜில்லா படத்திலும், அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் அதன் பின்பு யாசிக்க, ஐஸ்வர்யா உடன் கூட்டணி சேர்ந்து பலவிதமான மோச காரியங்களை செய்து வந்தார். இதனால் மக்களுக்கு இவர் மீது வெறுப்பு வந்தது.
இந்நிலையில் மஹத்தை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் வைத்த கோரிக்கையின்படி ரெக்கார்ட் வழங்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகர் மஹத்.
இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத் முதல் வேலையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான சிம்புவை சந்தித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு மஹத் வெளியேறும்போது தன்னை இந்த வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது நடிகர் சிம்புதான் என கூறினார். வீட்டிலிருந்து வெளியேறியதும் மஹத்தை பார்த்த சிம்பு செல்லமாக கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
This is how my best friend #Simbu #Str welcomes me after #BiggBoss house 🏡 😂🤦🏻♂️ love you da 🤗 pic.twitter.com/0a3W3x8o8b
— Mahat Raghavendra (@MahatOfficial) August 27, 2018