மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதெல்லாம் ஒரு பாட்டா?? சமந்தாவின் அந்த ஹிட் பாடலை வறுத்தெடுத்த பாடகி எல்.ஆர் ஈஸ்வரி.!
சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்பவர் எல்.ஆர் ஈஸ்வரி. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பாடகி எல்.ஆர் ஈஸ்வரி சினிமா பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.
அவர் இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தனது தனித்துவமான குரலால் எல்.ஆர் ஈஸ்வரிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் தனது பாடல்கள் குறித்தும், சினிமா வாழ்க்கை குறித்தும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, சினிமா உலகில் நுழைந்த துவக்கத்தில் நான் கோரஸ் பாடல்கள்தான் பாடினேன். பின்னர் எனது விடாமுயற்சியாலே பல கஷ்டங்களை தாண்டி நான் சினிமாவில் பாடகியாக பல பாடல்களை பாடினேன். தற்போது வரும் பாடல்களை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சமீபத்தில் புஷ்பா படத்திலிருந்து வெளிவந்த ஊ சொல்றியா மாமா பாடலை கேட்டேன். அதெல்லாம் ஒரு பாட்டா? ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஏதோ ஒரு மாதிரி இருந்தது எனக் கூறியுள்ளார்.