மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதனால்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினோம்! Mr&Mrs சின்னத்திரை குறித்து உண்மையை போட்டுடைத்த பாடகி ரம்யா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி Mr&Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் தங்களது வாழ்க்கைத் துணையுடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான போட்டிகளில் கலந்துகொண்டு, அவற்றில் வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒளிபரப்பான Mr&Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமான பாடகி ரம்யா அவரது கணவர் சத்யாவுடன் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்று வந்த அவர்கள் கடந்த இரு வாரங்களாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் சமீபத்தில் நடைபெற்ற செமி பைனல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து பாடகி ரம்யா கூறுகையில், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம் என்பதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சீரியஸாக 2 ரவுண்டுகள்தான் தாண்டுவோம் என நினைத்தோம். அனைவரது அன்பிற்கும் மிக்க நன்றி. எனக்கு லேசாக வைரல் ஜுரம் இருந்தது. அதனால் என்னால் கடந்த சில நாட்களாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நலம் பெற்று வருகிறேன் என கூறியுள்ளார்.