மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொம்ப மோசம்! எல்லை மீறி பேசுறீங்க.! பிரபல நடிகரை லெப்ட் ரைட் வாங்கிய பாடகி சுசித்ரா! வைரல் ஆடியோ!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். மேலும் இவர் பத்திரிகையாளராகவும் உள்ளார். அதுமட்டுமின்றி யூடியூப் சேனல் நடத்திவரும் அவர் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளாராம். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் சரமாரியாக திட்டியுள்ளார். அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.
அதில் சுசித்ரா, உங்களது வீடியோ பார்த்தேன் அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் என்ன கேட்டாலும் செய்வேன் என்று கூறியுள்ளீர்கள்? அதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கா? என்னை பற்றி மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக பேசியிருக்கீங்க.
நீங்க சுசித்ரா முழுப் பைத்தியம், ஹோட்டல்ல போயி கத்துவாங்க, ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க அப்படிலாம் சொல்லிருக்கீங்க. உங்கள் குழந்தைகளை பற்றி யாராவது தவறாகப் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்களையெல்லாம் கைது செய்ய வேண்டும். ஒரு பொண்ணை இவ்வளவு கேவலமா, அசிங்கமா நாக்கில் நரம்பு இல்லாமல் எல்லை மீறி ரொம்ப பேசுறீங்க என கடுமையாக விளாசியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.