மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Siragadikka Aasai Promo: மீனாவுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்த முத்து: சிறகடிக்க ஆசை இந்தவார ப்ரோமோ உள்ளே.!
நடிகர்கள் கோமதி பிரியா, வெற்றி வசந்த், ப்ரீத்தா ரெட்டி, ஸலாம் அருண், அணிலா ஸ்ரீகுமார், ஸ்ரீதேவா, பாக்கியலட்சுமி, சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் சிறகடிக்க ஆசை.
இத்தொடர் 240 நாட்களை கடந்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. 3 குழந்தைகளின் தாயான பார்வதிக்கு நடு மகன் முத்து மீது ஏற்படும் வெறுப்பு, அவரது மனைவியின் மீதும் திரும்புகிறது. அதேவேளையில், கடைக்குட்டி மற்றும் மூத்த மகனின் மீது தாய்க்கு கொள்ளை பிரியம்.
இவர்களின் குடும்பத்தில் நடக்கும் பல சுவாரஷ்ய காட்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றதால், முத்து - மீனா தம்பதி ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு வாரத்தில் முத்து - மீனாவை வீட்டில் இருந்து வெளியேற்ற தாய் முயற்சிக்க, மகன் முத்துவோ தனது மனைவி மீனாவை பாசத்துடன் தாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.