மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹிட் இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நேர்ந்த திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்!
2011-ம் ஆண்டு கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிவா. இந்த படத்திற்கு பிறகு ரசிகர்கள் அவரை சிறுத்தை சிவா என அழைத்தனர். இவர் துவக்கத்தில் சினிமாவில் ஒளிப்பதிவாளராகவே அறிமுகமானார். மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் அஜித்துடன் கூட்டணியில் இணைந்து அவர் இயக்கிய வீரம் படம் செம ஹிட் கொடுத்தது. பின்னர் அவர் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து அஜித்தின் படங்களை இயக்கியுள்ளார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயக்குமார் திடீரென நேற்று உயிரிழந்தார். இதனால் சிவாவின் குடும்பத்தினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.