பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகர் திலகம் சிவாஜி வீட்டிலேயே இப்படியொரு பிரச்சினையா.? நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் அதிரடி புகார்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக, சகாப்தமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருக்கு பிரபு, ராம்குமார் ஆகிய மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். பிரபு சினிமாவில் நடித்து வருகிறார். ராம்குமாரும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் பாஜக கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.
நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழகம் முழுவதும் ரூ.270 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவர்களின் சகோதரிகளான சாந்தி மற்றும் ராஜ்வி இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் அவர்கள், எங்களுக்கே தெரியாமல் தங்கள் சகோதரர்கள் சொத்துக்களை விற்றுள்ளனர். தங்கள் மகன்களின் பெயர்களில் சொத்துக்களை மாற்றிவிட்டனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் தங்களது தந்தை சொத்துக்கள் குறித்து எந்த உயிலும் எழுதி வைக்காத நிலையில், ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் பொய்யான உயிலை தயார் செய்து எங்களை ஏமாற்றிவிட்டனர். மேலும் எங்களது தாய் வழி சொத்துக்களிலும் பங்கு தரவில்லை. அதுமட்டுமின்றி எங்களது அப்பா சேர்த்து வைத்த 10 கோடி மதிப்புமிக்க ஏறக்குறைய 1000 சவரன் தங்கம்,வெள்ளி மற்றும் வைரம் போன்றவற்றை கூட தராமல் ஏமாற்றிவிட்டனர். மேலும் கோபலபுரத்தில் உள்ள வீட்டை விற்றுவிட்டனர். ராயப்பேட்டையில் இருக்கும் 4 வீடுகளில் கிடைக்கும் வாடகை பணத்தில் எங்களுக்கு பங்கு தருவதில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.