#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்போ கோடியில் சம்பளம்! தன் முதல் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் SK20 இப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக அவர் 25கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் பரவியது. நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் மெரினா. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வெறும் 10,000 மட்டும் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அவர் விழா ஒன்றிலும் கூறியுள்ளாராம்.