மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்றா வெடிய... பட்டைய கிளப்பும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்.!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் உருவான திரைப்படம் ஜிகர்தண்டா. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
வர இருக்கின்ற தீபாவளி பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
#JigarthandaDoubleX
— karthik subbaraj (@karthiksubbaraj) September 11, 2023
Teaser:https://t.co/jZHVaTFRAc
"A Pandyaa Western" Story
XXing In Theatres this Diwali #APandyaaWestern#JigarthandaDoubleXTeaser#DoubleXDiwali@offl_Lawrence @iam_SJSuryah @dop_tirru @Music_Santhosh@kaarthekeyens @stonebenchers @NimishaSajayan…
கதைக்களம் 1975-ல் நடப்பது போல் டீசரில் தெரிகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் முரட்டு வில்லனாகவும் புஷ்பா சாயலில் இருக்கிறார். எஸ்ஜே சூர்யா பார்க்கும்போது இயக்குனர் கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. மொத்தத்தில் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு என்டர்டெயின்மெண்ட் பிளாக்பஸ்டர் ஆக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் இந்த டீசரை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.