மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பண்டிகை வேறலெவல்தான்! சிவகார்த்திகேயன் நடிக்கும் SK20 படம் ரிலீஸ் எப்போ? வெளிவந்த சூப்பர் தகவல்!
தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து டான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் SK20 படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோசப்கா நடித்து வருகிறார். SK20 படத்தில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளார். மேலும் இதில் பிரேம்ஜி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு தொடங்கி காரைக்குடி, பின் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SK20 படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படமும் ரிலீசாக உள்ளது.
#SK20FromAugust31 🇮🇳🇬🇧🕊️❤️👍 pic.twitter.com/wb8FsOAxro
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 30, 2022