மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அன்பான மக்களே! நடிகை சினேகா விடுத்த மிக முக்கியமான கோரிக்கை! தீயாய் பரவும் வீடியோ!
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் முதல் அலை, இரண்டாவது அலை என பரவி சற்றும் எதிர்பார்த்திராத பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்த கொடிய கொரோனா தொற்றுக்கு ஆளாகி பெரும் அவதிபட்டனர். மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் துயரமும் நேர்ந்தது.
மேலும் இந்த கொரோனா தொற்றால் சிறு தொழில்கள் தொடங்கி பெரிய பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்தும் பெரும் நஷ்டமடைந்து பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள ஒரே வழி தடுப்பூசி போடுவது மட்டுமே என அறிவுறுத்தபட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவ்வப்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை விளக்கி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சினேகா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அன்பான மதுரை மக்களே, மதுரை மாநகராட்சி சார்பில் வரும் சனிக்கிழமை உயிரை காக்கும் கொரானா தடுப்பூசி முகாம் உங்கள் வீட்டின் அருகேயுள்ள வாக்கு சாவடி மையங்களிலும், ஆரம்ப சுகாதார மையத்திலும் நடைபெற உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் கலந்துக்கொண்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.