#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமனாரை போலவே.. ரஜினியின் சின்ன மருமகனுக்கு இப்படியொரு ஆசையா? சௌந்தர்யாவின் முடிவால் அதிருப்தி!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி காந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ். மேலும் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் அவர் இரண்டாவதாக தொழிலதிபர் விசாகனை திருமணம் செய்து கொண்டார்.
விசாகனின் தந்தை இந்தியாவில் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில் விசாகனும் பிரபல தொழிலதிபராக திகழ்ந்து வரும்நிலையில் அவருக்கு ஒரு ஃபேஷனுக்காக சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென ஆசையாம். இதற்காக அவர், அமெரிக்காவில் உள்ள நடிப்பு கல்லூரி ஒன்றில் நடிப்பு கலையை கற்றுத் தேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவரை ஹீரோவாக்க பல இயக்குனர்கள் அணுகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிப்பது குறித்து விசாகன், மனைவி சௌந்தர்யாவிடம் கேட்ட நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாராம். மேலும் சினிமா எனது முழு நேர தொழிலாக இருக்காது, பிஸினஸ் தான் முக்கியம். பேஷனுக்காக ஒரு படம் பண்ணலாமே என எவ்வளவோ கூறியும் சௌந்தர்யா ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் விசாகனும் அவரது குடும்பத்தினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.