திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த பாடகர் எஸ்.பி.பி யின் 16வது நாள் நினைவஞ்சலி! முக்கிய பிரபலம் செய்த நெகிழ்ச்சி காரியம்!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25ம் தேதி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் மறைவு உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எஸ்.பி.பி மறைந்த 16-வது நாள் நினைவுநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரசு தரப்பில் புதுச்சேரியில் அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கம் சார்பில் 3 மணி நேரம் தொடர் இசையஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜான்குமார் எம்.எல்.ஏ எஸ்பிபி அவர்களின் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் நெகிழ வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.