பல வருஷத்திற்கு பிறகு அழகுபதுமை நடிகை ஸ்ரீதேவி எடுத்த புதிய அவதாரம்! அதுவும் எந்த நிகழ்ச்சியில் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். பின்னர் அவர் தெலுங்கில் ஈஸ்வர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டானது.
இந்த நிலையில் அவர் கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையை கவனித்து வந்த ஸ்ரீதேவி தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக களமிறங்கியுள்ளார். அதாவது தெலுங்கு StarMaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Comedy Stars என்ற நிகழ்ச்சியின் நடுவராக ஸ்ரீதேவி களமிறங்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.