மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பிரபல கலை இயக்குனர் சுனில் பாபு திடீர் மரணம்; சோகத்தில் திரையுலகினர்..!
சீதாராமம், வாரிசு படத்தில் கலை இயக்குனராக பலராலும் கவனிக்கப்பட்ட சுனில் பாபு மாரடைப்பால் காலமானார்.
கலை இயக்குனர், தயாரிப்பு மேற்பார்வையாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் சுனில் பாபு. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
பிரபல கலை இயக்குனர் சாபு சிறிலிடம் பணியை கற்றுக்கொள்ள தொடங்கிய சுனில் பாபு துப்பாக்கி, பீஷ்மா பர்வம், மஹரிஷி, கஜினி, ப்ரேமம், எம்.எஸ் தோனி உட்பட பல படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். வாரிசு படத்திலும் கலைப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு தற்போது 50 வயதாகும் நிலையில், குடும்பத்தாருடன் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். நேற்று திடீரென அவர் நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதியாகவே, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.