"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
என்னது.. குக் வித் கோமாளி சீசன் 3 ல் அவரும் இல்லையா! அப்போ கஷ்டம்தான்! ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இதன் முதல் சீசனில் வனிதா, ரம்யா பாண்டியன், ரேகா, உமா ரியாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வனிதா வெற்றியாளரானார்.
குக் வித் கோமாளி முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகினர். இரண்டாவது சீசனில் அஸ்வின், கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், தீபா, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து உள்ளிட்ட பலரும் போட்டியாளராக கலந்து கொண்டனர். மேலும் ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, தங்கதுரை, சரத் ஆகியோர் கோமாளிகளாக பெரும் ரகளைகள், சேட்டைகள் செய்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோமாளிகளான ஷிவாங்கி, புகழ் ஆகியோருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. இதனால் அவர்கள் குக் வித் கோமாளி சீசன் 3 கலந்து கொள்ளும் வாய்ப்பு குறைவு என பல தகவல்கள் வெளிவந்தது. இது ரசிகர்கள் மற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது கொஞ்சிக் கொஞ்சிப் பேசி ரசிகர்களை கவர்ந்த சுனிதாவும் குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் பரவி வருகிறது.
அதாவது அவர் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க உள்ளார் எனவும், அதனால் அவர் குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்கேற்க மாட்டார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.