"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
ஒருவேளை அப்படி இருக்குமோ.! சுனிதாவுடன் சுற்றி திரியும் பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெருமளவில் பிரபலமடைந்தவர் சுனிதா. மொழி தெரியாத இவர் தமிழை கற்றுக் கொண்டு கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அழகிற்கே இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து சுனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனதை பெருமளவில் கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார்.
குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமடைந்தவர் சந்தோஷ் பிரதாப். தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ள அவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலமே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சுனிதாவுடன் நட்பாக பழகி வந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சுனிதா பின் ரொமான்டிக்காக சுற்றி வருவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட சந்தோஷ், சர்ப்ரைஸ்... காத்திருங்கள் புதிய ப்ராஜெக்டின் அப்டேட்டிற்காக' என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சுனிதா தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சந்தோஷ் உடன் உள்ளார். அதனை கண்ட நெட்டிசன்கள் ஒருவேளை இருவரும் காதலிக்கிறார்களோ?? என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.