மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கும் கடைசி படத்தின் இயக்குநர் இவர்தானா.? கிசுகிசுக்கும் கோலிவுட் திரையுலகம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும் கடைசி படத்தை அறிவிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினி நடித்த படங்களில் கடைசியாக மெகா ஹிட்டானது ஷங்கர் இயக்கத்தில் நடித்த "எந்திரன்" திரைப்படம் தான்.
ரஜினி அவருடைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடித்த கோச்சடையான் படம் மற்றும் லிங்கா, கபாலி, காலா, எந்திரன் 2.0, பேட்ட, தர்பார், அண்ணாத்த என்று வரிசையாக அவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவின. இதில் கபாலி, 2.0, பேட்ட போன்ற படங்கள் மட்டும் வெற்றியடைந்தன. ஆனாலும் ரஜினி படங்களுக்குரிய' மெகாஹிட்' அடையவில்லை. தயாரிப்பாளர்களுக்கு ஓரளவே லாபம் கிடைத்தது.
ஒரு பெரும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் ரஜினி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தை பெரிதும் நம்பியுள்ளார். மேலும், கன்னடத்தில் வெளியான "காந்தாரா" திரைப்படம் ரஜினிகாந்தைப் பெரிதும் கவர்ந்ததால், அப்பட இயக்குநர் ரிஷப்ஷெட்டியை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படத்தை ரிஷப்ஷெட்டி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரிஷப் "காந்தாரா 2" படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்ததும் ரஜினிகாந்தின் படம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது